பரமபதம் (பரலோக இராஜ்ஜியம்)
இதற்கான வழியும், வாசலும்.
கேள்வி - ஒருவரை ஒருவர் இடித்து தள்ளிக் கொண்டு, முண்டி அடித்துக் கொண்டு ஒரு வாசலுக்குள் நுழைகிறார்கள். கேட்டால் இது சொர்க்க வாசல் என்கிறார்கள். அதில் நுழைந்து விட்டால் ஒருவர் செய்த பாவங்கள் நீங்கி சொர்க்கத்திற்கு போய் விட முடியுமா? இதுவும் கிருத்தவத்தில் சொல்லப்படும் பாவ மன்னிப்பும் ஒன்றுதானே?
கிருஸ்து தருகிற பாவ மன்னிப்பு என்பது தவறுக்காக வருந்தி, மனம் திருந்தியவர்களுக்கு மட்டுமே. கிட்டத்தட்ட இங்கும் அதே நிலைதான். பாவமோ, புண்ணியமோ வினைகளை உன் காலடிகளில் சமர்ப்பிக்கிறேன். எல்லாவற்றையும் நீ ஏற்றுக் கொள் என்று இறைவனிடத்தில் சரணாகதி அடைய வேண்டும். அந்த அளவுக்கு மனம் பக்குவமடைந்து விடுகின்ற பொழுது எந்த மனிதனும் பாவம் செய்யத் தயங்குவான். மேலும் இந்த சொர்க்க வாசல் என்ற வார்த்தை தவறாகும், அதற்குப் பெயர் பரமபத வாசல் என்பதேயாகும்.
நல்வினை, தீவினைகளின் பயன்களே சொர்க்கம், நரகம் என்கிற இரண்டு நிலைகளாகச் சொல்லப்படுகிறது. இரு வினைகளையும் கடந்தவர்களுக்கே பரமபதம் வாய்க்கும். எனவேதான் ஔவை ''இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து'' என்று சொன்னார்.
வைணவ சமயத்தில் குறிப்பிடுகின்ற வைகுண்டம் வேறு, சொர்க்கம் வேறு. சொர்க்கத்திற்கு போகிற ஜீவன் மீண்டும் பிறவி எடுக்கும் என்பதே கோட்பாடு. எனவே இது வைகுண்ட வாசல் அல்லது பரமபத வாசல் என்றுதான் சொல்ல வேண்டும். பரமபதத்தை அடைவதே உயிர்களின் நோக்கம். வைகுண்ட ஏகாதசி அன்று வைணவத் திருத்தலங்களில் இந்த வாசல் திறக்கப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் பரவசத்தோடு அதற்குள் நுழைந்து கோஷமிட்டபடி ஆனந்தப் பரவச நிலையில் வருவதைப் பார்க்கலாம். இந்த பக்திப் பரவசம் என்பது முடிவில் தான் அடையப் போகும் ஆனந்தப் பரவச நிலையின் ஒரு முன்னோட்டம் என்று சொல்லலாம். இறைவனின் திருவுருவத்தில் மனம் கரைந்து பின் திருவடிப் பேறாகிய முக்தி நிலைக்கு இட்டுச் செல்வது பக்தி யோகம்.
குண்டலினி யோகத்தில் நம் உடலிலும் ஒரு வாசல் இருக்கிறது என்று சொல்கிறார்கள் யோகிகள். அதைப் பற்றி நாம் அறிந்து கொள்ள சுஷும்னை நாடியை நோக்கிப் போக வேண்டும். இந்த சுஷும்னை நாடியை சுசேருலதை என்று மேல்நாட்டு அங்க வியூக சாஸ்திரம் வர்ணிக்கிறது. ஆனால், அது ஸ்தூல காரியங்கள். நம் யோகிகள் கூறும் சுஷும்னை நாடி சூக்கும சரீரத்தில் உள்ளது. ஒரு குண்டலினி யோகியின் ஆன்மிக, ஆனந்தப் பயணம் இதற்குள்ளேதான் நடக்கிறது. எனவேதான் ஏசு மகான் முக்திக்கான (பரலோக இராஜ்ஜியத்துக்கான) வழி ஒடுக்கமானது என்றார். அவர் கூறியதை பிரம்மரந்திரத்தின் ஊசி முனையளவு துவாரத்தோடும் ஒப்பிடலாம். இந்த பிரம்ம துவாரமே பத்தாவது வாசல் என்று சொல்லப்பட்டுள்ளது. படைப்புக் கடவுளான பிரம்மா இந்த ஸ்தூல சரீரத்திற்கு உயிராகிய ஒளியை வழங்க இதன் வழியாகவே பிரவேசித்தார் என்று சில உபநிடதங்கள் சொல்கின்றன. யோகிகளும் இதன் மூலம் உயிரை வெளியேற்றி பரமாத்மாவோடு கலப்பதுவே இறவா நிலை எனப்படுகிறது. மற்ற துவாரங்கள் வழியாக ஏற்படுவது இறப்பு. பத்தாவது ஒடுக்கமான துவாரத்தின் வழியாக பிரவேசிப்பது இணைப்பு. இறப்புக்கும், இணைப்புக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கவே ஏசு நாதர் சித்தர் பரலோக இராஜ்ஜியத்திற்கான வழி ஒடுக்கமானது என்று சொன்னார். பரலோக இராஜ்ஜியம், பரமபதம் இரண்டும் ஒன்றுதான்.
பிரம்ம வாசலைப் பற்றிப் பார்த்தோமல்லவா ? இனி பரமபத வாசலை கண்டு பிடித்து திறந்து உள்ளே நுழைவோமா ?
சுஷும்னை நாடியானது மூலாதாரச் சக்கரம் முதல் பிரம்மரந்திரம் வரை ஓடுகிறது. விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்ளா விட்டாலும், மேலை நாட்டு அங்க வியூக சாஸ்த்திர வல்லுனர்கள் ஒத்துக் கொள்கிறார்கள். சுசேருலதையில் ஒரு குழாய் போன்ற துவாரம் உள்ளது என்று. இதையே நம் நாட்டு யோகிகளும் சொல்கிறார்கள். எனவே ஸ்தூலத்தில் அது சுசேருலதை, சூக்குமத்தில் சுஷும்னை என்று நான் சொல்லாமலேயே உங்களுக்குப் புரிந்திருக்கும். அதைத் தாண்டி நுணுக்கமாக மேல்நாட்டு அங்கவியூக சாஸ்திரிகள் வேறு ஒன்றையும் சொல்லவில்லை. ஆனால் நம் யோகிகள் அதி சூக்குமங்களையும் ஞானத்தால் உணர்ந்து மிகத் தெளிவாக விளக்கி அருளியிருக்கிறார்கள்.
இந்த சுஷும்னை நாடிக்குள்ளே வஜ்ஜிரை என்று ஒரு நாடி உள்ளது. அது ஒளி பொருந்தியது, இது இராஜஸ குணத்தைத் தூண்டுவது. இந்த வஜ்ஜிரை நாடிக்கு உள்ளே சித்ரை என்று ஒரு நாடி உள்ளது. இது பழுப்பு நிறமுடையது, இது சாத்வீக குணத்தைத் தூண்டுவது. இந்த சித்ரைக்குள்ளும் மிக மிக நுண்ணிய துவாரம் உள்ளது. இதுவே பிரம்ம நாடி என்று அழைக்கப்படுகிறது. இதன் வழியாகத்தான் மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினி சகஸ்ராரத்திற்குச் செல்கிறது. அதாவது ப்ரம்ம நாடி வழியாக, பிரம்மரந்திரம் அடைந்து பிரம்ம துவாரம் வழியாக வெளியேறி பரமாத்மாவோடு கலப்பதுவே மரணமில்லாத பெரு வாழ்வு. தேகம் வீழாது. இது சித்தர்கள் மொழி வழக்கு. பக்தி யோகத்தைப் பொருத்த வரை இது பிறப்பறுந்த முக்தி நிலை.
இந்த வழியில்தான் நமது ஆறு சக்கரங்களும் அமைந்துள்ளன. அதுபோல சித்ரை நாடியின் அடி முனையில் உள்ள துவாரத்திற்கும் பிரம்ம துவாரம் என்றே பெயர். இதன் வழியாகவே குண்டலிலி நுழைந்து மேலேறி பிரம்மரந்திரத்திற்குப் போகும்.
இந்தப் பிரபஞ்சத்தில் இதை விளக்கும் விதமாக பத்ரிநாராயணத்திலுள்ள ஹரியிடம் சொல்லும் வாசலான ஹரித்துவாரத்தைச் சொல்லுவார்கள். இந்த சித்ரை நாடி சிறு மூளையில் முடிவடைகிறது. சில யோகிகள் சுஷும்னையையே ப்ரம்ம நாடி என்பார்கள். ஏனென்றால் வஜ்ஜிரையும், வஜ்ஜிரைக்குள் சித்ரையும் சுஷும்னை நாடிக்குள்ளேயேதான் இருக்கின்றன. இந்த சித்ரை நாடியானது யோகிகளால் போற்றப்படுவதும், மிகவும் விரும்பப்படுவதுமாகும். இது மெல்லிய தாமரை நூல் போன்றது. ஐந்து வர்ணங்களாய் பிரகாசிப்பது. சரியாகச் சொன்னால் இது சுஷும்னையின் மத்தியில் கீழிருந்து மேலாக உள்ளது. இது உடலின் மிகவும் உயிர்ப்புள்ள, ஜீவாதாரமான பாகம். இதைத்தான் பரம்பத வாசல், பரலோக இராஜ்ஜியத்திற்கான பாதை என்று சொன்னார்கள். இதுவே அழியாத் தன்மையை தருவது. இந்த நாடியில் உள்ள சக்கரங்களை தியானிப்பவன் வினைகள் நீங்கி பரிசுத்தமடைகிறான். எனவே இதுவே மோட்சமளிப்பது.
இந்த சுஷும்னையில் சுவாசம் ஓடும் போது மனம் சஞ்சலமற்று விளங்கும். இது ஒரு அவஸ்தை எனக் கொள்ளப்பட்டு, அந்நிலையை ''உன்மானி அவஸ்தை'' என்பார்கள். இந்த அவஸ்தை நிலையே யோகத்தில் மிக உன்னதமான நிலை. இந்த சுஷும்னை நாடி திறந்த பிறகு எளிதில் தியானம் கைகூடும். நாடிகளில் தடைகள், அசுத்தங்கள் தங்கி தடை செய்தால் மத்திய நாடியான சுஷும்னையில் சுவாசம் செல்லாது. இதற்காகவே நாடி சுத்தி மற்றும் பிராணாயாம்ம் செய்யச் சொல்கிறார்கள்.
இதை உணர்த்தும் விதமாக கோவில்களில் ஒரு வாசலை அமைத்து ஆண்டுக்கு ஒரு முறை அதில் நுழைவது என்பது முன்னோட்டம் அல்லது பயிற்சி. பொதுவாக ஆலயங்கள் அமைக்கப்பட்டதன் நோக்கமே மனதை இறைவனோடு இணைப்பதற்கான பயிற்சிகளுக்காகத்தான். சரியைகள், கிரியைகள், இயம நியமங்கள் எல்லாம் மனிதனின் மனம் பரிபக்குவம் அடைவதற்காகவே. ஆலயங்கள் மட்டுமல்ல, நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு செயலும் இறை சிந்தனையோடு இருக்கும் பொழுதாதான் முடிவில் மனம் இறை சிந்தனையில் திளைத்து, இறைவனோடு நம் ஜீவன் இணைவதற்கு ஏதுவாக அமையும்.
- Ram Manohar
Source: https://www.facebook.com/PayanamTetal/photos/a.116509505178701.24046.116507058512279/398154210347561/?type=3

Comments
Post a Comment