பிரபஞ்சம் உருவானது எப்படி?

பிரபஞ்சம் உருவானது எப்படி?


ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தான்உணர்ந் தெட்டே


திருமூலர் திருமந்திரம் பாடல் 1 


பிரபஞ்சம் உருவாவதற்கு முன் இருந்த ஒன்றுதான் கடவுள். 

அவனது அருளின் காரணமாக, ஓம் என்ற பெருவெடிப்பில் அகாரம் என்ற எதிர்மறை சக்தி துகள்களாகவும் மற்றும் நேர்மறை சக்தி துகள்களாக இரண்டு சக்தி நிலையாக மாறினான் . இதை பிரபஞ்சவாலை என்கிறார் போகர் . இதை காயத்திரி சக்தி என்கிறார் விசுவாமித்திரர் . (பார்க்க காயத்திரி மந்திரம் வாலை தியானம் பதிவு ) இதை ஆம் ஊம் என்றார் கருஊரார். 

இந்த சக்தி துகள்கள் மகாரம் என்ற நடுநிலை துகளாக மூன்றானது. நாதவிந்து என்ற நான்காம் உயிர் துகள் ஆனது . நாதவிந்து என்ற உயிர் துகள் நேர்மறை உயிர்துகள் எதிர்மறை உயிர்த்துகள் ஆக பிரிந்தது . எனவே அகார, உகார, மகார, நாத விந்து ஆகிய ஐந்து அடிப்படை துகள்கள் உருவாகின. இந்த ஐந்தை பஞ்சவிதது என்கிறார் அகத்தியர். இந்த பஞ்ச வித்துக்களே பஞ்ச பூதமாகின ( மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ). இந்த பஞ்ச பூதங்கள் பிரபஞ்சமாக உயிர்களாக உருவானது. இந்த உயிர்கள் நால்வகை யோனிகளில் ( பிறப்புவழி ) எழுவகை உயிர்களாக பிறந்தன. இந்த உயிர்களில் ஆறு ஆதாரங்களுடன் 96 தத்துவங்களுடன் ஆதிமனிதன் உருவானான். இந்த ஆறு ஆதாரம் பெற்ற மனிதன் இதன் மூலம் கடவுள் கொள்கை உருவாக்கினான் . கடவுளை உணர்ந்தான். கடவுளை உணர்ந்த பின் கடவுளை தொடர்பு கொள்ள முயன்றான். அப்பொழுது அவன் ஏழாவது நிராதாரமாகிய சகஸ்ராரம் என்ற ஆதாரத்திற்கு சென்றான். அஷ்டாங்க யோகத்தில் எட்டாவது நிலை ஆகிய சமாதி நிலையில் தன்னை இறைவனின் ஒருபகுதி என உணர்ந்து இறைவனுடன் கலந்து இறைவனாகினான். முக்தி பெற்றான். இறைவன் மனிதனாக உரு மாறினான். மனிதன் இறைவனாகி சுயஉரு பெற்றான். 

இப்பாடல் சொல்லும் தத்துவங்கள்: 

 பிரபஞ்சம் உருவாவதற்கு முன் இருந்த ஒன்றுதான் கடவுள். இதற்கு உருவமோ, பெயரோ இல்லை. இது ஓர் இறை கொள்கை. 

கடவுளை ஒ என்றும் ஓங்காரம் அல்லது ஓம் என்றும் சித்தர்கள் சொல்கிறார்கள். ஓம் பெருவெடிப்பாகியது. இதுவே விரிவு அடைந்து அகார, உகார, மகார, நாத, விந்து ஆகி, பின்பு பஞ்ச பூதமாகி பிரபஞ்சம் உருவானது. இது சித்தர்கொள்கை.

வேதங்களும் புராணங்களும் இதை சொல்கின்றன. ஓம் என்ற பெருவெடிப்பில் பிரபஞ்சம் உருவானது என்கிறார் அகத்தியர். 

இன்று பூமி உருவாக்கும் ஓசை ஓம் என்று அறிவியலார் சொல்கிறார்கள். 
மாணிக்கவாசகர் திருவாசகத்தில் “ஓர் உருவம் ஒர்நாமம் இல்லானை ஆயிரம் நாமம் சொல்லி தெல்லேலம் கொட்டாமோ“ என்றார். 

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்  நன்றே நினைமின் நமனில்லை நாணாமே சென்றேபுகும் கதி இல்லை நுஞ்சித்தத்து நின்றே நிலைபெற நீர் நினைந் துய்மினே  

- திரு மூலர் திருமந்திரம் பாடல் 2104 

“ஒருவன் என்றே தெய்வத்தை வணங்கவேண்டும்”  - அகத்தியர் ஞானம் 9 பாடல் 4 

இந்த ஓர்இறை கொள்கையை கிறித்துவமும், இஸ்லாமியமும் சொல்கின்றன. ஆயினும் மனிதன் வேறு இறைவன் வேறு என்கின்றது. இது துவைத கொள்கை. பக்த்தியோக நிலையில் கடைபிடிப்பது. 

கடவுள் தனது அருளால் தனது ஒரு அம்சத்தை (சக்தியை) பிரபஞ்சமாக விரிவடைய செய்தார். ( இறைவனின் மாறுபட்ட தோற்றம் மனிதன் ) பிரபஞ்சதின் உயர் அங்கம் மனிதன். பிரபஞ்ச மறைப்பில் இருந்து மனிதன் விடுபட்டு மீண்டும் இறைவனாகிறான். பிரபஞ்ச மறைப்பு அல்லது இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே இருக்கும் தடை மாயை என்கிறார்கள் வேதாந்திகள். உலக மாயையில் இருந்து விடுபட்டு மனிதன் இறைவனாகிறான். இது அத்வைதம் மற்றும் வசிஷ்டா அத்வைத கொள்கைகள். 

இக்கருத்தை வேதங்கழும் சொல்கின்றன (ரிக்வேதம் புருஷ சூக்தம் 10:8 90 )  

“இப்பிரபன்ச்சம் முழுவதும் எனது ஒரு அம்சத்தால் வியாபித்து உள்ளேன்“ 
- கீதை 10.24   பிரபஞ்ச உற்பத்தியில் பரிணாம வளர்ச்சியே மனிதன். கடவுள் நேரடியாக மனிதனை படைக்கவில்லை. அனைத்து சித்தர்களும் இதை சொல்லி உள்ளார்கள். இன்றைய அறவியல் இதை உறுதி செய்கிறது.

இக்கருத்துகளை மாணிக்கவாசகர் திருவாசகத்தில் சொல்லியுள்ளார்.
  புல்லாகிப் பூடாகி புழுவாய் மரமாகி  பல்விருகமாகி பறவையாய் பாம்பாகி  கல்லாய் மனிதராய் “ என்றார்.

தன்னை கடவுளின் ஒரு அம்சம் என்று உணர்ந்த மனிதன் யோகா வழியில் கடவுளை ஒளிவடிவில் தன்னுள் காண்கிறான். தன்னுள் கண்ட கடவுளை நோக்கி பயணித்து பல படித்தரங்களை தாண்டி இறைவனுடன் ஒன்றி தானே இறைவன் என்ற நிலை அடைகிறான். இது சித்தர் கொள்கை .  இதை சிதர்கள் “தான் அவன் ஆதல்“ என்றனர். “நான் சிவனானேன் “ என்கிறார் திரு மூலர்.

வேதங்கள் இதை உறுதி செய்கின்றன. 

யஜூர்வேதம் ஸ்ரீ ருத்ரம் (8. 1) சொல்வது “நம: சிவாய சிவதராய“ சிவம் தன்னை அடைந்தவனை சிவமாக “சிவதரன்“ ஆக மாற்றுகிறது. 

“சிவோகம்“ என்றால் நான் சிவன் என்ற பொருள்தரும். 

- Dr. Raja Krishna Moorthy

http://www.siddharyogam.com/

Source: https://www.facebook.com/groups/siddhar.science/permalink/1061665407217206/

பிரபஞ்சம் என்பது வியக்த நிலை. ஆகாயம் ஒடுக்க நிலை. ஒடுக்க நிலை மாறி வியக்த நிலை என்கிற விரிவு அதாவது தோற்ற நிலை ஏற்படுவதையே சிருஷ்டி என்கிறோம். 

அதி சூக்குமமாக விளங்கும் ஆகாயம் அல்லது வெட்டவெளித் தன்னை வெளிப்படுத்துவதே சிருஷ்டி எனப்படுகிறது. இந்த சிருஷ்டி தொண்ணூற்றியாறு தத்துவங்களாக, நிலைகளாக நிகழ்கிறது. இந்தத் தொண்ணூற்று ஆறு தத்துவங்களையும் கடந்த பரம்பொருளின் பூரணமான வெளிப்பாடே மனிதனாவான். 

இந்துக்களின் வேதத்தில் மட்டுமல்ல, ஏசுநாதர் கூட "கடவுள் தன்னுடைய சாயலாகவே உன்னைப் படைத்தார்" என்று சொல்வதைக் காணலாம். எனவே அதி சூக்கமமாகத் திகழும் பரம்பொருள் தன்னை வெளிப்படுத்திய தொண்ணூற்று ஆறு தத்துவங்களின் ஒவ்வொரு நிலைகளின் தோற்றமே இங்கு காணும் யாவும். இதில் தொண்ணூற்று ஆறு தத்துவங்களையும் உள்ளடக்கியவன் மனிதன். அவனால் மட்டுமே கடவுள் தன்மையை உணர முடியும்.

இதே நிலையை நாம் பெற்றொர்களிடத்திலிருந்தும் உணர முடியும். எப்படிக் கடவுளின் அத்தனை அம்சங்களும் நம்மிடத்தில் அதி சூக்கும நிலையில் விளங்குகிறதோ, அது போலவே நம் பெற்றோர்களின் அத்தனை அம்சங்களும் சூக்கும நிலையில் நம்மிடத்தில் விளங்குகின்றன. அவர்களின் சாயலாகவே நாம் திகழ்கிறோம். பரம்பொருள் நிலையான அதி சூக்கும நிலையை நாம் அடைவதற்கு, சூக்கும நிலைகளே நமக்கு படித்தரங்களாக, நிலைக்களன்களாக விளங்குகின்றன. இந்த அடிப்படையில்தான் பித்ருக்களுக்கு வழிபாடுகள், கடமைகள் செய்யப்படுகின்றன. பெற்றோர் இறந்து விட்டாலும் அவர்கள் தங்கள் பிள்ளைகளின் வடிவில் இந்த பூமியில் இருந்து கொண்டுதானிருக்கிறார்கள். அவர்களது ஆன்மாவுக்கும், பிள்ளைகளின் ஆன்மாவுக்குமான தொடர்பு இருந்து கொண்டுதானிருக்கிறது. அவர்களை வழிபடுமளவு நம் பிரச்சனைகளுக்கான தீர்வு அவர்களது ஆன்மாவின் மூலம் நமக்குக் கிடைக்க ஏதுவாகிறது.

அதி சூக்கும நிலையான பரம்பொருள் நிலைக்கும், நமது தற்பொழுதைய ஜட நிலைக்கும் இடையில் சூக்கும நிலையில் நம் பெற்றோர்களின் பதிவுகளே விளங்குகின்றன. எனவே கடவுளை வழிபடுவது போலவே நம் பெற்றோர்களை, மூதாதையர்களை(குல தெய்வங்கள்) வழிபடுவதும் நடைமுறையில் உள்ளது.

- Ram Manohar

Comments

Popular posts from this blog

அறம், பொருள், இன்பம், வீடு

ஆழ்மன தியானம்