Posts

Showing posts from March, 2017

அறம் - கதை

ஒரு புலி வேடனைத் துரத்திக்கொண்டு போயிற்று. வேடன் அருகில் இருந்த மரத்தில் ஏறிக் கொண்டான்.  அதற்கு முன்பே, மரத்தின் மீது ஒரு கரடி இருந்தது.  புலி கரடியிடம் கூறிற்று : இவ்வேடன்: நமது மிருக குலத்துக்கே பகைவன்; இவனைக் கீழே தள்ளி விடு!   இருக்கலாம் ஆனால், இவன் நான் இருந்த மரத்தை அண்டியதால் என்னிடம் சரண் புகுந்தவன் ஆகிறான். சரண் அடைந்தவனைக் கைவிட மாட்டேன் இவ்வாறு சொல்லிவிட்டு கரடி உறங்கிற்று. சற்று நேரம் கழித்து புலி வேடனிடம் கூறிற்று: எனக்கு பசியாக இருக்கிறது. நீ அந்தக் கரடியைக் கீழே தள்ளிவிட்டால், நான் அதை உண்டு பசியாறி உன்னை விட்டு விடுகிறேன். வேடன் கரடியைத் தள்ளிவிட்டான் கரடியோ மரத்தின் கீழ்க் கிளை ஒன்றைப் பிடித்துக் கொண்டு, விழாமல் தப்பி, மேலே ஏறிக் கொண்டது. அப்போது புலி கரடியிடம் சொன்னது. இந்த மனிதன் நன்றிகெட்டவன். சரண் அடைந்தவனைக் காப்பாற்றுவேன் என்ற உன்னையே தள்ளிவிட்டான். அவனை தள்ளிவிடு!  அதற்கு கரடி சொன்னது: எவனோ ஒருவன் தன் ஒழுக்கத்தினின்று வழுவினான் என்பதற்காக நான் என் தர்மத்தைக் கைவிடக் கூடாது. இன்னமும் அவன் சரண் புகுந்தவனே. அவனைத் தள்ளுவது அறத்தினின்று நா...

பாசம்

பற்றுதான் மனிதனின் துன்பத்திற்குக் காரணமாக இருக்கிறது. மரம் ஒன்றின் மேல் நிற்பவன் ஒரு கிளையை விட வேண்டுமாயின், வேறொரு கிளையைப் பற்ற வேண்டும். அது போல உலக பந்தங் களில் இருந்து, பற்றுகளில் இருந்து விடுபட வேண்டும் என்றால் பரம்பொருளாகிய இறைவனைப் பற்ற வேண்டும் என்பது கோட்பாடு. இதைத்தான் வள்ளுவப் பெருந்தகை... '' பற்றுக பற்றற்றான் பற்றினை ; அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு .'' என்கிறார். பாசம் என்றால் கயிறு. மனிதனின் மனதை உலகாயத்தில் கட்டி வைப்பதால் பற்றுக்கு பாசம் என்று ஒரு பெயர். எமன் கையில் இருப்பதும் பாசம்தான். உலகாய பந்தங்களில் இருந்து விடுபட்டு பாசத்தை விட்டு விட்டால் எமன் பாசத்தை வெல்லலாம். பற்று உள்ளவர்கள் மீதுதான் எமன் பாசம் வீசப்படுகிறது. எனவே அவர்கள் உயிர் பிரிகிறது. ஆனால் பற்றை அறுத்தவர்கள் தம் உடல் பற்றையும் விடுத்து உயரப் பறந்து விடுகிறார்கள். தன் ஜீவனை தானே பிரித்து பரம்பொருளோடு ஐக்கியப்படுத்திக் கொள்கிறார்கள். எமன் பாசம் அவர்களிடம் வேலை செய்யாது. இத்தகைய பாசப்பற்றுகளை விடுவதற்காக இறைவனைப் பற்றும் முறையே கடவுள் வழிபாடு. இந்த வழிபாடு என்பது இருவகைப்படும்....

சினம்

கோபப்படுவதை விட கோபத்தை அடக்குவதால் ஏற்படும் உடல், மனத் தொந்தரவுகள் அதிகம். அதை விட கோபப்பட்டு விடுவதே எவ்வளவோ மேல். அதற்காக எதற்கெடுத்தாலும் கோபப்பட்டு விடாதீர்கள். அதாவது கோபத்தை அடக்குவதால் அதிகத் தீமை ஏற்படும் என்பதை உணர்த்தவே அவ்வாறு கூறினேன். இயல்பாகவே கோபம் எழாத வகையில் நம் மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது சினம் உள்ளத்தில் எழாதபடி பழகிடுதல் வேண்டும். சினம் எழும் பொழுதெல்லாம் உள்ளத்தின் தயை எனும் நீரால் அதை அணைத்திடுதல் வேண்டும். இது ஒரு பழக்கம்தான். பழக்கம் அழுத்தமடையும் பொழுது அது இயல்பாக ஆகி விடும். மேலும், கோபம் வராமலிருக்க உணவில் உப்பு, காரம் குறைத்துக் கொள்ளுவது ஒரு உபாயமாக நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. புத்தர் ஒரு நாள் வீடு வாடாகப் போய் பிக்சை எடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அவரது உபதேசங்களோடு முரண்பாடு கொண்ட ஒருவன் அவரைத் தகாத முறையில் பேசினான். அவன் ஏசிக் கொண்டேயிருந்தானேயொழிய, புத்தர் காதே கேட்காதது போல அமைதியாகச் சென்று கொண்டிருந்தார். அவரது இந்தச் செயல் திட்டியவனுக்கு எரிச்சலாக இருந்தது. எனவே அவன் புத்தரிடம் ''நான் இவ்வளவு திட்டுகிறேன்...

பற்று - துறவறம் & இல்லறம்

துறவறத்தைப் பொருத்த வரை உலகப் பொருட்களின் மீது கொள்ளும் பற்று புறப்பற்று எனப்படும். உயிர் மீது கொள்ளும் பற்று அகப்பற்று எனப்படும். இந்த இரண்டு பற்றுகளும் அற்று  இருப்பதே துறவறம் எனப்படும்.  எந்தப் பொருள் மீது உள்ள பற்றை நாம் விட்டு விடுகிறோமோ, அந்தப் பொருளால் விளையும் துன்பங்களில் இருந்து நாம் விடுபடுகிறோம் என்பதுதான் உண்மை. பற்றுகள் நம்மைப் பற்றிக் கொள்கின்றன. தேன் குடிக்கப் போகும் வண்டின் கால்கள் அதில் மாட்டிக் கொள்வது போல, நாம் பற்றுகளில் அகப்பட்டுக் கொள்கிறோம். நாம் பற்று கொண்டோம். ஆனால், பற்றப்படுகின்றோம். நாம் அனுபவிக்க வந்தோம், ஆனால் அனுபவிக்கப்படுகிறோம். நாம் ஆள வந்தோம், ஆனால் ஆளப்படுகிறோம். இதுதான் பற்று கொண்டவர்களின் நிலை. பிறப்பு அறுக்க வேண்டும் என்று நினைத்தால், முதலில் நாம் உடல் மீது கொண்ட பற்றை அறுக்க வேண்டும். பிறப்பு அறுபட வேண்டும் என்று நினைப்பவனுக்கு உடல் பற்று ஆகாது. உடல் ஒரு கருவி மாத்திரமே என்கிற எண்ணம் வலுப்பெற வேண்டுமேயன்றி, உடல் மீது பற்று கொள்ளலாகாது. யான், எனது என்ற செருக்கறுபட்டால்தான் ஆன்ம ஞானம் வாய்க்கும், சிவலோகம் சித்திக்கும். இருவகைப் பற்...

இல்லறம்

இல்லறக் கடமைகளை முறையாக, நெறி பிறழாமல் செய்தாலே போதும். இல்லற வாழ்க்கையும் ஆன்மீக வாழ்க்கைதான். அதனால்தான் அதையும் அறம் என்று சொன்னார்கள். அதாவது இல்லறம். அறம் என்றால் என்ன ? அவரவர் கடமைகளை அவரவர் தவறாமல் செய்வது அறம் என்பர் சிலர். பிறருக்கு தன்னிடம் உள்ளதை தருமம் செய்து வாழ்வது அறம் என்பர் சிலர். அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்பாடாமல் இருப்பது அறம் என்பர் சிலர். இவையனைத்துமே அறம்தான். ஆனால், ஒரு பக்கம் தருமம் செய்கிறேன் என்று சொல்லி, அதற்காக பொருளீட்டுவதற்காக மறுபக்கம் தகாத செயல்களைச் செய்து வந்தால் அது அறமாகாது. இப்படி ஏதோ ஒரு கோட்பாட்டை கடைபிடிக்கிறேன் என்று சொல்லி, பலப்பல பாவங்களைச் செய்து விட்டு, நான் அற வாழ்க்கை வாழ்கிறேன் என்று நம் மனதை நாமே சமாதானம் செய்து கொள்வதால் எந்தப் பயனுமில்லை. பத்து நாட்கள் குளிக்காத ஒருவன் தன் மேல் பன்னீரும், அத்தரும், சந்தனமும், சவ்வாதும் எடுத்துப் பூசிக் கொள்வது போன்ற செயல்தான் அது. அனைத்திற்கும் அடிப்படையான அறம் ஒன்று இருக்கிறது. அதை அடைந்து விட்டால் மற்ற அறச் செயல்கள் யாவும் தானே அமைந்து விடும். அதை அடைவதற்காகத்தான் யோகிகளும், ஞானிகளும், மகான...

பூமியின் வயது

மனிதன் சுவாசத்தை அடிப்படையாக வைத்தே இந்த பூமியின் வயதை நம் முன்னோர்கள் கணக்கிட்டு கூறியிருக்கிறார்கள். நாள் ஒன்றுக்கு மனிதனின் சுவாசம் 21,600 என்றும், அதை முழுச் சதுரக் கூறால் பெருக்க வரும் எண்ணிக்கையே கிரேதா யுகத்தின் வயது என்றும் சொல்லப்பட்டுள்ளது. அதாவது 21,600 x 80 = 17,28,000 ஆண்டுகள்.  அதே சுவாசத்தை முக்கால் சதுரக் கூறால் பெருக்க வரும் எண்ணிக்கை திரேதா யுகத்தின் வயது. அதாவது 21,600 x 60 = 12,96,000 ஆண்டுகள்.  அடுத்து அரை சதுரக் கூறால் பெருக்க வரும் விடையான 21,600 x 40 = 8,64,000 ஆண்டுகள் துவாபர யுகத்தின் வயது.  அதே சுவாசத்தின் எண்ணிக்கையை கால் சதுரக் கூறாகிய 20 ஆல் பெருக்க வரும் எண்ணிக்கையே கலி யுகத்தின் வயது. அதாவது 21,600 x 20 = 4,32,000 ஆண்டுகள்.  இந்த நான்கு யுகங்கள் சேர்ந்தது ஒரு மகாயுகம் . அதாவது ஒரு மகாயுகம் 43,20,000 ஆண்டுகள் கொண்டது.  இதைப்போல 71 மகாயுகங்களைக் கொண்டது ஒரு மனு . அதாவது 43,20,000 x 71 = 30,67,20,000 ஆண்டுகள்.  இதைப் போன்ற பதி நான்கு மனுக்கள் கொண்டது ஒரு கற்பம் . அதாவது 14 x...

ஆழ்மன தியானம்

ஆழ் மனதைத் தொடர்பு கொள்ள, மனதின் மற்ற இயக்கங்கள் இல்லாத அமைதியான நிலை வேண்டும். கனவற்ற ஆழ்ந்த உறக்கம் என்பது கூட ஒரு வரம்தான். இதனால் ஆன்மிக முன்னேற்றங்கள் ஏதும் இல்லை, இது ஒரு ஜட உறக்கம் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. ஆனாலும் கூட நம் அழுத்தமான எண்ணங்கள், கேள்விகள், எதிர்பார்ப்புகளுக்குத் தீர்வு அல்லது விடை அப்பொழுதான் பிறக்கின்றன என்பது மிகப் பெரிய உண்மையாகும்.  நமக்குத் தேவையான எந்த ஒரு விஷயத்தையும் அடைவதற்கு அல்லது நமது பிரச்சனைகளை தீர்ப்பதற்கு மனம்தான் கருவியாக அமைகிறது. ஆனால், அதற்கு மனம் அமைதியாக இருக்க வேண்டும், மூளையின் செயல் திறன் வலிமையாக இருக்க வேண்டும். மனதைப் பொருத்த வரை புறமனம் மற்றும் நினைவு மனத்தை விட ஆழ்மனம்தான் வலிமை பெற்ற பகுதியாக விளங்குகிறது. அதே சமயம் புறமனமும், நினைவு மனமும் இயங்கிக் கொண்டிருக்கின்ற நேரத்திலே ஆழ்மனதின் இயக்கம் நம் உணர்வுக்கு வருவதில்லை. புறமனதின், நினைவு மனதின் இயக்கங்கள் குறையும் பொழுதுதான் ஆழ்மனதின் சிந்தனைகள் வலிமையாகச் செயல்படுகின்றன.  இதை நாம் அனைவருமே நம் அனுபவத்தில் பார்த்திருக்கிறோம். தீர்க்க முடியாத ஏதோ ஒரு பிரச்சனையைப் பற்...

பரமபதம் (பரலோக இராஜ்ஜியம்)

இதற்கான வழியும், வாசலும். கேள்வி - ஒருவரை ஒருவர் இடித்து தள்ளிக் கொண்டு, முண்டி அடித்துக் கொண்டு ஒரு வாசலுக்குள் நுழைகிறார்கள். கேட்டால் இது சொர்க்க வாசல் என்கிறார்கள். அதில் நுழைந்து விட்டால் ஒருவர் செய்த பாவங்கள் நீங்கி சொர்க்கத்திற்கு போய் விட முடியுமா? இதுவும் கிருத்தவத்தில் சொல்லப்படும் பாவ மன்னிப்பும் ஒன்றுதானே?  கிருஸ்து தருகிற பாவ மன்னிப்பு என்பது தவறுக்காக வரு ந்தி, மனம் திருந்தியவர்களுக்கு மட்டுமே. கிட்டத்தட்ட இங்கும் அதே நிலைதான். பாவமோ, புண்ணியமோ வினைகளை உன் காலடிகளில் சமர்ப்பிக்கிறேன். எல்லாவற்றையும் நீ ஏற்றுக் கொள் என்று இறைவனிடத்தில் சரணாகதி அடைய வேண்டும். அந்த அளவுக்கு மனம் பக்குவமடைந்து விடுகின்ற பொழுது எந்த மனிதனும் பாவம் செய்யத் தயங்குவான். மேலும் இந்த சொர்க்க வாசல் என்ற வார்த்தை தவறாகும், அதற்குப் பெயர் பரமபத வாசல் என்பதேயாகும்.  நல்வினை, தீவினைகளின் பயன்களே சொர்க்கம், நரகம் என்கிற இரண்டு நிலைகளாகச் சொல்லப்படுகிறது. இரு வினைகளையும் கடந்தவர்களுக்கே பரமபதம் வாய்க்கும். எனவேதான் ஔவை '' இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து '' என்று சொன்னார்.  வைணவ சமயத...

யோகம்

யோகம் என்பது இணைப்பது என்பார்கள். அதாவது ஜீவாத்மாவை பரமாத்மாவோடு இணைக்கும் சாதனைகளை யோகம் என்று குறிப்பிடுகிறோம்.  அப்படியென்றால் அந்த இணைத்தல் என்ற முயற்சிக்குத் தடையாக ஏதோ ஒன்று இருக்கிறது. அந்தத் தடையை தகர்ப்பது கடினம் என்பதினால்தான், அதைச் சாதனை என்கிறார்கள் என்பது யாரும் சொல்லாமலேயே தெரிந்து விடுகின்றதல்லவா ?  உடல், மனம், உயிர் என்ற மூன்றில் உடலுக்குள் ஆத்மா உயிராக இருக்கும் வரை ஜீவாத்மா எனப்படுகிறது. ஆக ஜீவாத்மா, மனம், பரமதாத்மா என்ற மூன்றில், ஜீவாத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் இடையில் நிற்பது மனம்தானே ? இந்த மனதை ஒடுக்குவதுதான் யோகமே தவிர, இணைப்பதல்ல. இணைப்பது என்பது விளைவு.   இதில் ஒருவர் தன்னுடைய இயல்புக்கு ஏற்ற யோகத்தையே அனுசரிக்க வேண்டும், அப்பொழுதுதான் மனம் வசப்படும், இணைப்பு சாத்தியமாகும். தமோ குணம் அதிகமுள்ளவர்களுக்கு கர்ம யோகம் சிறந்தது. ரஜோ குணம் உள்ளவர்களுக்கு பக்தி யோகம் சிறந்தது. சத்துவ குணம் நிரம்பப் பெற்றவர்களே ஞான யோக த்தை அனுசரிப்பதற்குத் தகுதி உடையவர்களாக இருக்கிறார்கள். அந்தந்த யோக நிலைகளில் தீவிரமாக ஈடுபட்டு மேன்மையடைந்தவர்கள் ப...

ஆசை

ஆசை  உடைகோ வணம்உண்டு உறங்கப் புறத்திண்ணையுண்டு உணவிங்கு அடைகாய் இலையுண்டு அருந்தத்தண் ணீர்உண்டு அருந்துணைக்கே விடையேறும் ஈசர் திருநாமம் உண்டுஇந்த மேதினியில் வடகோடு உயர்ந்தென்ன தென்கோடு சாய்ந்தென்ன வான்பிறைக்கே ! -  பட்டினத்தார்  இந்த பூவுலகில் வாழ்வதற்கு வழியா இல்லை ? உடுக்க கௌபீனம், படுத்து உறங்குவதற்கு வீட்டின் வாயிற்புறத் திண்ணை, பசிக்கிறதா கவலை இல்லை உண்பதற்கு இலைகள், காய்கள் இவைகள் உண்டு, தாகமெடுத்தால் அருந்துவதற்குத் தண்ணீர்  உண்டு, உற்ற துணையாக ரிஷப வாகனம் மீது அமர்ந்திருந்து அருள் பாலிக்கும் சிவபெருமானின் ஐந்தெழுத்துத் திருமந்திரமுண்டு, ஆதலினாலே இவ்வுலகில் எனக்கு என்ன கவலை. அமாவாசைக்குப் பின் வரும் மூன்றாம் பிறைச் சந்திரனுடைய வடகோடு உயர்ந்தால் என்ன, தென்கோடு தாழ்ந்தால்தான் எனக்கென்ன கவலை. (மூன்றாம் பிறையின் வடகோடு உயர்ந்து, தென்கோடு தாழ்ந்திருந்தால் மழைக்கு அறிகுறி) ஆசை வயப்பட்டவர்களுக்கே, இந்த சாஸ்திர சம்பிரதாயங்களெல்லாம். திருஓடு கூட இல்லாத கோவணத்தாண்டியான முற்றுந் துறந்தவர்களுக்கு சந்திரனின் பிறையில் வடபக்கம் உயர்ந்தாலும் கவலையில்லை, தென்ப...

தவம்

தவம்  தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு -   திருக்குறள் 266 தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவர், அவர் அல்லாத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டு வீண் முயற்சி செய்கின்றவரே. இது வள்ளுவப் பெருந்தகையின் வாக்கு. சரி, எது தவம் ? அடக்கமும், அன்பும், பொறுமையும் வாய்ந்த வாழ்வுதான் தவமாகும். அத்தகைய வாழ்க்கையை மேற்கொண்டவர்கள் மட்டுமே கடமையைச் செய்பவர்கள்; மற்றவர்கள், ஆசையால் அலைக் கழிக்கப்பட்டு வீணான செயல்களில் ஈடுபட்டு துன்பத்தில் உழல்பவர்கள் ஆவார்கள் என்பதே நுட்பமான கருத்தாகும்.  ஒருவர் தன்னை வருத்தி முழுப் பக்தியுடன் இறைவனை நோக்கி தவம் செய்தால், அதற்கு இறைவன் கட்டுப்பட்டு வரம் வழங்குவான் என்பதே தவத்தின் அடிப்படை கருத்தாகச் சொல்லப்படுகிறது. ஆனால், உண்மையில் தவம் என்பது இந்த பிரபஞ்சமும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களும், உயிரற்ற பொருட்களும் உருவாக காரணமான பேராற்றலை பற்றி விழிப்புணர்வு பெறுதலும் அவ்வாற்றலை வாழ்வில் பயன்படுத்தலுமே ஆகும். அப்படியானால் தவமிருந்து ஞானம் பெற்றார்கள் என்று சொல்கிறார்களே ? எ...

அறம், பொருள், இன்பம், வீடு

அறம், பொருள், இன்பம், வீடு உண்மை என்பது வேறு நிலையான நிரந்தர உண்மை என்பது வேறு. இந்த உடல் இப்போது இருக்கிறது. அது உண்மைதான். ஆனால், நாளை இருக்குமா ? சந்தேகம் தான். " ஊரும், உற்றாரும், யாரு ம்  சதமல்ல " என்று பட்டினத்தார் சொல்வது இதைத்தான்.  ஆனால், உலகம் முழுவதிலும் எப்போதும் மாறாத, அழியாத உண்மை ஒன்று இருக்கிறது. அது ஏன் நமக்குத் தெரியவில்லை ? என்றால், நிலையற்ற உண்மைகளை பெரிதென எண்ணி நிலையான உண்மைகளை விட்டு விலகி நிற்பதேயாகும். அந்த நிலையான உண்மையோடு இணைந்து எப்பொழுதும் அந்த உணர்வு நிலையிலேயே இருப்பதே நம் உண்மையான இயல்பாகும். அதுவே தர்மம் அல்லது அறம் எனப்படும்.  நாம் நினைப்பது போல தானம் செய்வது மட்டும் தர்மமல்ல.   அதாவது உலகில் காணும் எந்த ஒன்றும் அதனதன் இயல்பிலேயே இருப்பதே தர்மம் என்றும் அறம் என்றும் சொல்வார்கள்.  ஒவ்வொரு புனித நூல்களுக்கும் ஒரு சாராம்சம் இருக்கும். அந்த நூல்களில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தையும் ஓரிரு வாக்கியங்களில் சுருக்கிச் சொல்லி விடுவார்கள். கீதையின் சாரம் " கடமையைச் செய் பலனை எதிர்பாராதே " என்பது. பைபிளின் சாரம் " உன்னை...