இல்லறம்
இல்லறக் கடமைகளை முறையாக, நெறி பிறழாமல் செய்தாலே போதும். இல்லற வாழ்க்கையும் ஆன்மீக வாழ்க்கைதான். அதனால்தான் அதையும் அறம் என்று சொன்னார்கள். அதாவது இல்லறம்.
அறம் என்றால் என்ன ? அவரவர் கடமைகளை அவரவர் தவறாமல் செய்வது அறம் என்பர் சிலர். பிறருக்கு தன்னிடம் உள்ளதை தருமம் செய்து வாழ்வது அறம் என்பர் சிலர். அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்பாடாமல் இருப்பது அறம் என்பர் சிலர். இவையனைத்துமே அறம்தான். ஆனால், ஒரு பக்கம் தருமம் செய்கிறேன் என்று சொல்லி, அதற்காக பொருளீட்டுவதற்காக மறுபக்கம் தகாத செயல்களைச் செய்து வந்தால் அது அறமாகாது.
இப்படி ஏதோ ஒரு கோட்பாட்டை கடைபிடிக்கிறேன் என்று சொல்லி, பலப்பல பாவங்களைச் செய்து விட்டு, நான் அற வாழ்க்கை வாழ்கிறேன் என்று நம் மனதை நாமே சமாதானம் செய்து கொள்வதால் எந்தப் பயனுமில்லை. பத்து நாட்கள் குளிக்காத ஒருவன் தன் மேல் பன்னீரும், அத்தரும், சந்தனமும், சவ்வாதும் எடுத்துப் பூசிக் கொள்வது போன்ற செயல்தான் அது.
அனைத்திற்கும் அடிப்படையான அறம் ஒன்று இருக்கிறது. அதை அடைந்து விட்டால் மற்ற அறச் செயல்கள் யாவும் தானே அமைந்து விடும். அதை அடைவதற்காகத்தான் யோகிகளும், ஞானிகளும், மகான்களும் தவமாய்த் தவம் கிடந்தார்கள். எல்லாவற்றையும் விட்டு விட்டு காடு, மலைகளில் போய் அமர்ந்து கொண்டார்கள்.
எல்லாவற்றையும் விட்டு எங்கே போனாலும், அடைய வேண்டிய தகுதியை அடையவில்லை என்றால் அது எப்படி ஆன்மீக வாழ்வாகும் ?
தொண்டரடிப் பொடியாழ்வார் திருவரங்கனிடம் சொல்கிறார்...
''மனத்திலோர் தூய்மை யில்லை வாயிலோர் இன்சொ லில்லை
சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன் வாளா
புனத்துழாய் மாலை யானே பொன்னிசூழ் திருவ ரங்கா
எனக்கினிக் கதியென் சொல்லாய் என்னையா ளுடைய கோவே''
என்பார். அழுக்காறு, காமம், பேராசை, இன்னா சொல், வெகுளி இவையெல்லாம் உடையவர்கள் எத்தனை தானங்கள் செய்தென்ன, தவங்கள் செய்தென்ன ? பக்தி செய்தென்ன ? இவை எப்படி அறமாகும் ? இவை எப்படி தெய்வீக வாழ்க்கையாகும் ? ஆகாது.
''அழுக்கு நெஞ்சினேன் பொய்யல தறியேன்
அணங்க னார்மய லாழத்தில் விழுந்தேன்
பழுக்கு மூடருள் சேர்ந்திடுங் கொடியேன்
பாவி யேனெந்தப் பரிசுகொண் டடைவேன்
மழுக்கை யேந்திய மாசிலா மணிக்குள்
மன்னி யோங்கிய வளரொளிப் பிழம்பே
வழுக்கி லார்புகழ் தணிகையென் னரசே
வள்ளலே யென்னை வாழ்விக்கும் பொருளே.''
என்பார் வள்ளலார். மழுவை ஏந்திய சிவபெருமானாகிய மாசில்லாத மாணிக்க மணிக்குள் உதித்தோங்கிய ஒளிப் பிழம்பே ! முருகப் பெருமானே, குற்றமில்லாதவர்கள் புகழ்கின்ற தணிகை வள்ளலே, என்னை அறவாழ்வு வாழச் செய்யும் படித் தூண்டும் ஞானப் பொருளே, நான் அழுக்கு படிந்த மனதையுடையவன், பொய்யைத் தவிர வேறு உண்மையையே பேசியறியேன், எப்பொழுதும் காமத்தின் ஆழத்தில் வீழ்ந்து வருந்துகிறேன், அடி முட்டாள்களுடன் சேர்ந்து வாழும் கொடியவன், பாவியாகிய நான் எந்த நல்ல செயல்களைச் செய்து உன் திருவடியை அடைவேன் ? என்று கேட்கிறார். எவ்வளவு பெரிய மகான்கள், சித்தர்கள், இவர்கள் இப்படிப்பட்ட தீய குணங்களை உடையவர்களா ? என்று ஐயங் கொள்ள வேண்டாம். அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் பாற் கொண்ட அன்பால், அவர்கள் நிலையில் தங்களை நிறுத்தி இறைவனிடம் வேண்டி அவர்களுக்காக மன்றாடுகிறார்கள்.
இந்த மனப்பான்மை, இந்த இளகிய மனம், இந்த பேதமற்ற நிலை எப்படி வாய்த்தது ? அது அவர்களுக்கு எப்படி வாய்த்தது என்றால், அவர்கள் அற வாழ்க்கை வாழ்ந்தார்கள். அதிலிருந்து இம்பியும் அவர்கள் பிசகவில்லை.
அப்படியானால் எது அறம் ? இதற்கு நம் வள்ளுவர் ஒண்ணே முக்கால் வரியில் விளக்கத்தை சொல்லி விடுகிறார்.
மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.
பெரிய விஷயமெல்லாம் ஒன்றுமில்லை. அறம் என்றால், அது மனதின் கண் மாசில்லாதவனாக வாழ்தல் அவ்வளவுதான். ஒருவருடைய மாண்பு அவர் மனதில்தான் உள்ளது. ஒருவருடைய வாழ்வு அவர் மனதில் உள்ள நலத்திற்கு ஏற்றவாறுதான் அமையும். நாம் அனைவருமே மனதில் பன்னெடுங்காலமாக மாசுகளை சுமந்து கொண்டே திரிகிறோம். அதை அகற்ற நாம் முயற்சி செய்வதேயில்லை. ஒரு நல்ல காரியம் செய்ய நினைத்து, அதற்குப் பின்னால் பல்வேறு மாசுகளை மனதில் ஏற்றி வைத்துக் கொள்கிறோம். காலையில் எழுகிறோம் பல்லில் உள்ள மாசுகளை அகற்றுகிறோம், உடலுக்குள் சேர்ந்துள்ள கழிவுகளெனும் மாசுகளை வெளியேற்றுகிறோம், உடலைக் கழுவி, உடலில் உள்ள அழுக்கெனும் மாசுகளை நீக்குகிறோம், ஆனால், மனதில் உள்ள மாசுகளை போக்குவதற்கு நாம் என்ற செய்தோம் ? என்ன செய்யப் போகிறோம் ?
இந்த கேள்விகளுக்கான பதிலில்தான் உங்கள் வாழ்க்கை தெய்வீகமான வாழ்க்கையா அல்லது விலங்கு குணமுடைய மனித வாழ்க்கையா என்பது அடங்கியிருக்கிறது.
இல்லறமோ, துறவறமோ எந்த அறத்தை வேண்டுமானாலும் கடைபிடிக்கலாம். ஆனால், மனம் தூய்மையுடையதாக இருக்க வேண்டும். அதுதான் முக்கியம். மனம் தூய்மையடைந்த ஒருவனுக்கு எந்த சாதனங்களும், யுக்திகளும் தேவையில்லை. அவன் உண்மைக்குள் உண்மையாக உண்மையாகவே தெய்வீக வாழ்க்கைதான் வாழ்ந்து கொண்டிருப்பான்.

Comments
Post a Comment